மெல்பர்ன்: திங்கட்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவிற்கு 2,441 அமெரிக்க டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இது புதிய வரலாற்று உச்சமாகும். இதன் எதிரொலியாக சிங்கப்பூர் உள்பட, உலகச் சந்தைகளில் தங்கம் விலை தடாலடியாக ஏறியுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி 2024ன் நாணயக் கொள்கையைத் தளர்த்தும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருவதாலும், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்களாலும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது.
இது ஏப்ரல் மாதத்தில் எட்டப்பட்ட முந்தைய ஒருநாள் சாதனையை மிஞ்சியது. வணிகர்கள், அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பர் மாதத்திலேயே கடன் வட்டி விகிதங்களை குறைக்கக்கூடும் என்று கூறி வருகின்றனர். தங்கப் பரிவர்த்தனையில் வட்டி இல்லை என்பதால் அந்த நிலைமை தங்கத்தின் மதிப்பை உயர்த்தும் என நம்பப்படுகிறது.
கடந்த வாரம், அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்தது. மே 15ஆம் தேதி வெளியிடப்பட்ட தரவுகள் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக தணிந்தது. இது அமெரிக்க டாலரின் விலை நிர்ணயம் செய்யப்படும் விலையுயர்ந்த உலோகத்தின் மதிப்பை உயர்த்தியுள்ளது.
வெள்ளி, பிளாட்டினம் ஆகிய உலோகங்களின் விலைகளும் ஏறின. வெள்ளி விலை 11 ஆண்டு உச்சத்தில் வர்த்தகம் செய்யப்பட்டது.
அனைத்துலக பொருளியல் சூழல், அமெரிக்க டாலரின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.
சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கிக் குவிப்பதாலும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் சற்று பயந்து போனது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது.
காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூய தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22 காரட் தங்கம் என்பது 91.6 விழுக்காடு தங்கமும் 8.4 விழுக்காடு செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் உடையக் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

