கத்தாரில் ஹமாஸ் தலைவர்களைச் சந்தித்த அன்வார் இப்ராகிம்

கத்தாரில் ஹமாஸ் தலைவர்களைச் சந்தித்த அன்வார் இப்ராகிம்

1 mins read
de59ee20-6b76-4aca-a997-ff9be4138f73
கத்தாரில் ஹமாஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: தி ஸ்டார் நாளிதழ்
Google News Preferred Icon

தோஹா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கத்தாருக்கு மூன்று நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

காஸா போர் தொடர்பாக கத்தார் தலைவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

அத்துடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்களைத் திரு அன்வார் சந்தித்தார்.

ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹெனியே, முன்னாள் தலைவர் காலித் மஷால் ஆகியோருடன் திரு அன்வார் பேசினார்.

பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறையை இஸ்‌ரேல் நிறுத்தியே ஆக வேண்டும் என்பதே மலேசியாவின் மிக உறுதியான நிலைப்பாடு என்று திரு அன்வார் கூறினார். அதுமட்டுமல்லாது, பிடித்துவைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் அனைவரையும் விடுவித்து அமைதி உடன்படிக்கைக்கு இஸ்‌ரேல் இணங்க வேண்டும் என்றார் பிரதமர் அன்வார்.

ராஃபா நகரம் மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தாமல் இருக்க, அனைத்துலக அளவில் மலேசியா செவ்வனே பங்காற்றும் என்றார் அவர்.

காஸா போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கு உதவிக்கரம் நீட்ட மலேசியா கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கும் என்று திரு அன்வார் உறுதி அளித்தார்.

குறிப்புச் சொற்கள்
அன்வார் இப்ராகிம்மலேசியாகத்தார்ஹமாஸ்