உலகின் ஆகப் பெரிய பணக்காரக் குடும்பத்திடம் $478 மி. வீடு, 700 கார்கள்

2 mins read
a06d7297-38a7-4ad8-a170-95c302fd93a1
நஹ்யான் குடும்பத் தலைவரான ஷேக் முகம்மது ஸய்யித் அல் நஹ்யான் (நடுவில்), யுஏஇ அதிபரும் அபுதாபி ஆட்சியாளரும் ஆவார். - படம்: முகம்மது ஸய்யித்/இன்ஸ்டகிராம்

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளை (யுஏஇ) சேர்ந்த நஹ்யான் அரசக் குடும்பத்தார், வளைகுடா பகுதியில் வர்த்தகத்திலும் அரசியலிலும் முக்கியப் பதவிகளை வகிக்கின்றனர்.

உலகின் ஆகப் பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றான நஹ்யான் குடும்பத்தாரின் மொத்த சொத்து மதிப்பு, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் இருவரின் மொத்த சொத்து மதிப்பைவிட அதிகம்.

நஹ்யான் குடும்பத் தலைவரான ஷேக் முகம்மது ஸய்யித் அல் நஹ்யான், யுஏஇ அதிபரும் அபுதாபி ஆட்சியாளரும் ஆவார்.

அவருக்கு 18 சகோதரர்கள், 11 சகோதரிகள், ஒன்பது பிள்ளைகள், 18 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.

380,000 சதுர மீட்டர் பரப்பளவும் 478 மில்லியன் டாலர் மதிப்புள்ளதுமான பிரம்மாண்டமான கட்டடமான கஸ்ர் அல் வாட்டனில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக வசிக்கின்றனர்.

குடும்பத்தின் சொத்துகளில் யுஏஇவிலும் அனைத்துலக அளவிலும் ஆடம்பர சொத்துகளும் மேம்பாடுகளும் அடங்கும்.

ஒரு ஏர்பஸ் ஏ320-200, மூன்று போயிங் 787-9 உட்பட எட்டு விமானங்களை நஹ்யான் குடும்பத்தார் வைத்துள்ளனர். திரு ஷேக் முகம்மது மட்டும் 478 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள போயிங் 747, 176 மில்லியன் டாலர் மதிப்பிலான போயிங் 787 விமானங்களுக்குச் சொந்தக்காரர் ஆவார்.

அதோடு, உலகின் ஆகப் பெரிய படகுகளில் மூன்றும் நஹ்யான் குடும்பத்துக்குச் சொந்தமானவை.

அவர்களது கார் சேகரிப்பு புருவங்களை உயர்த்த வைக்கிறது. யுஏஇயிலும் மொரோக்கோவிலும் நான்கு அரும்பொருளகங்களில் கார்கள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஃபெராரி முதல் லம்போர்கினி வரை இக்குடும்பத்தாரிடம் 700க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன.

நஹ்யான் குடும்பம், சிட்டி காற்பந்துக் குழுமத்தில் 81% பங்குகளை வைத்துள்ளது. மான்செஸ்டர் சிட்டி, மும்பை சிட்டி, மெல்பர்ன் சிட்டி, நியூயார்க் சிட்டி போன்ற காற்பந்துக் குழுக்கள் அக்குழுமத்துக்குச் சொந்தமானவை.

குறிப்புச் சொற்கள்