காஸா போர் தற்காலிக நிறுத்தம்; மனிதநேய உதவி மீண்டும் தொடங்கியது

காஸா போர் தற்காலிக நிறுத்தம்; மனிதநேய உதவி மீண்டும் தொடங்கியது

1 mins read
10a59e21-2b45-45ce-9653-80fdea0cdbb4
‘த ஓப்பன் ஆர்ம்ஸ் என்ற ஸ்பெயின் நாட்டு அரசு சாரா அமைப்பின் மீட்புக் கப்பலுடன் சரக்குக் கலன் ஒன்றும் இழுவைப் படகு ஒன்றும் காஸாவுக்கு மனிதநேய அடிப்படையில் உதவிப் பொருள்களை மார்ச் 30ஆம் தேதி சைப்பிரஸ் நாட்டிலிருந்து ஏற்றிச் சென்றன. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

நிக்கோசியா: காஸாவில் ஏழு துயர் துடைப்பு ஊழியர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு தற்காலிகமாகப் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இந்த நிலையில் காஸாவுக்கு உதவிப் பொருள்கள் மீண்டும் செல்லத் தொடங்கியுள்ளன. இதன் தொடர்பில் பாலஸ்தீனர்கள் வாழும் அப்பகுதிக்கு சைப்பிரசிலிருந்து உணவுப் பொருள்களை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் அந்தத் துயர் துடைப்பு ஊழியர்கள்மீது மேற்கொள்ளப்பட்டத் தாக்குதல் காரணமாக ‘த வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’ என்ற அரசு சாரா அமைப்பு சைப்பிரசிலிருந்து காஸாவுக்கு உதவிப் பொருள்களை நேரடியாகக் கொண்டு செல்லும் தனது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், தற்பொழுது சைப்பிரசின் லார்னாக்கா துறைமுகத்திலிருந்து ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் வழங்கிய நிவாரணப் பொருள்களை ஏந்தி சரக்குப் படகு ஒன்று காஸவை நோக்கி வெள்ளிக்கிழமை புறப்பட்டதாகச் சைப்பிரஸ் நாட்டுத் தகவலறிந்த வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்