வங்கி நொடித்துப்போகாமல் இருக்க உதவிக்கரம் நீட்டும் வியட்னாம்

வங்கி நொடித்துப்போகாமல் இருக்க உதவிக்கரம் நீட்டும் வியட்னாம்

1 mins read
446ed67a-ab49-4219-a53c-c26d93a49d00
வியட்னனாமை உலுக்கிய மிகப் பெரிய ஊழல் குற்றம் காரணமாக சைகோன் வர்த்தக வங்கி கடுமையாகப் பாதிக்கப்பட்டு நொடித்துப்போகும் அபாயத்தில் உள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஹனோய்: வியட்னாமிய வரலாற்றிலேயே ஆகப் பெரிய நிதி மோசடியின் காரணமாக அந்நாட்டின் சைகோன் கூட்டுப் பங்கு வர்த்தக வங்கி நொடித்துப்போகும் நிலையில் உள்ளது.

அந்த வங்கி நொடித்துப்போகாமல் இருக்க வியட்னாமிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள வங்கிக்கு வியட்னாமின் மத்திய வங்கி இம்மாதம் 24 பில்லியன் அமெரிக்க டாலர் (S$32.8 பில்லியன்) வழங்கியுள்ளது.

இத்தகைய உதவியை வியட்னாமிய அரசாங்கம் செய்திருப்பது இதுவே முதல்முறை.

கடந்த பத்தாண்டுகளாக சைகோன் வர்த்தக வங்கியிலிருந்து பேரளவில் பணம் கையாடிய குற்றத்துக்காக அந்நாட்டைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தரான 67 வயது டுரோங் மை லானுக்கு ஏப்ரல் 11ஆம் தேதியன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றங்களின் விளைவாக ஏறத்தாழ 27 பில்லியன் அமெரிக்க டாலர் (S$36.5 பில்லியன்) இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
வியட்னாம்நிதி மோசடிவங்கி