மார்கோஸ்: டுட்டர்டேயை அனைத்துலக குற்றவியல் நிதிமன்றத்திடம் ஒப்படைக்க மாட்டேன்

மார்கோஸ்: டுட்டர்டேயை அனைத்துலக குற்றவியல் நிதிமன்றத்திடம் ஒப்படைக்க மாட்டேன்

1 mins read
ab61b542-6ec6-48e8-92c2-b45285429ded
பிலிப்பீன்ஸ் அதிபர் மார்கோஸ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மணிலா: முன்னாள் பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டேயை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திடம் (ஐசிசி) தாம் ஒப்படைக்கப்போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் கூறியுள்ளார்.

திரு டுட்டார்டே அவரது ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்திவருகிறது.

அவர் 2016ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட அந்நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அந்நடவடிக்கைகள் திரு மார்கோசின் ஆட்சிக் காலத்திலும் தொடர்கின்றன.

“அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் நமக்கு அனுப்பும் கைதாணையை நாங்கள் அங்கீகரிப்பதில்லை. நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம்,” என்றார் திரு மார்க்கோஸ்.

திரு டுட்டர்டே, 2019ஆம் ஆண்டில் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து பிலிப்பீன்சை மீட்டுக்கொண்டார். அவர் மேற்கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அந்நீதிமன்றம் அலசத் தொடங்கியதையடுத்து திரு டுட்டர்டே அவ்வாறு செய்தார்.

மீண்டும் ஐசிசியில் பிலிப்பீன்ஸ் சேராது என்று திரு மார்கோஸ் பலமுறை கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்பிலிப்பீன்ஸ்நீதிமன்றம்