சிறைத் தண்டனையை வீட்டுக் காவலாக மாற்ற நஜிப் விண்ணப்பம்

சிறைத் தண்டனையை வீட்டுக் காவலாக மாற்ற நஜிப் விண்ணப்பம்

1 mins read
09863db1-a642-4fdc-a76f-b9a01a7d9376
முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக். - படம்: பெரித்தா ஹரியான்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு முதலில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஜனவரி 29ஆம் தேதியன்று, அப்போது மலேசியாவின் மாமன்னராக இருந்த பாகாங் சுல்தான் அப்துல்லா அகமது ஷா அவருக்கு அரச மன்னிப்பு வழங்கியதை அடுத்து, அவரது தண்டனைக்காலம் ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், சிறைத் தண்டனையை வீட்டுக் காவலாக மாற்ற நஜிப் விண்ணப்பம் செய்துள்ளார்.

70 வயது நஜிப், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியிலிருந்து காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ல் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாநஜிப் ரசாக்