ரமலான் மாதத் தொடக்கத்தை அறிவித்த முஸ்லிம் நாடுகள்

ரமலான் மாதத் தொடக்கத்தை அறிவித்த முஸ்லிம் நாடுகள்

1 mins read
e6827610-514f-4ab0-83bb-3670533fee92
எகிப்துத் தலைநகர் கெய்ரோவில் உள்ள பள்ளிவாசலில், ‘தராவீஹ்’ தொழுகையில் கலந்துகொண்டோர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புனித ரமலான் மாதம் மார்ச் 11ஆம் தேதி தொடங்குவதாக சவூதி அரேபியாவும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளும் அறிவித்துள்ளன.

திங்கட்கிழமை, மார்ச் 11ஆம் தேதி, இந்த ஆண்டின் புனித ரமலான் மாதம் தொடங்குவதாக சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் அறிவித்ததாக, அந்நாட்டு அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான எஸ்பிஏ, மார்ச் 10ஆம் தேதி தகவல் வெளியிட்டது.

இஸ்லாமிய சமயத்தின் ஐந்து முக்கியத் தூண்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது ரமலான் மாதம்.

பிறை தெரிந்ததையடுத்து, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் கத்தாரும் மார்ச் 11ஆம் தேதி ரமலான் மாதம் தொடங்குவதாக அவற்றின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனங்கள் மூலம் தகவல் வெளியிட்டுள்ளன.

எகிப்தின் இஸ்லாமிய ஆலோசனை மன்றமான தர் அல்-இஃப்தா மார்ச் 11ஆம் தேதி ரமலான் மாதம் தொடங்குவதாக உறுதிசெய்துள்ளது. காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதிகளிலும் அல்ஜீரியா, துனீசியாவிற்கும் இது பொருந்தும்.

அவற்றின் அண்டை நாடுகளான மொரோக்கோவிலும் லிபியாவிலும் மார்ச் 12ஆம் தேதி ரமலான் மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சவூதி அரேபியாவில் மேக மூட்டம், தூசு மூட்டத்தால் பிறை தெரியவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் பிறகு அல் மஜ்மா பல்கலைக்கழக வானியல் கண்காணிப்பகம் பிறை தெரிந்ததாக உறுதிப்படுத்தியது.

ஜோர்தானில் மார்ச் 12ஆம் தேதி ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ரமலான்சவூதி அரேபியாஅறிவிப்பு