தீயணைப்பானைக் கொண்டு கொள்ளையடித்த இருவரைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்

தீயணைப்பானைக் கொண்டு கொள்ளையடித்த இருவரைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்

1 mins read
3ff4cf0a-c911-4fd8-abb0-81a85479b621
தீயணைப்புக் கருவிகளைக் கொண்டு கடையில் கொள்ளையடிக்க முயன்ற சந்தேக நபர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். - படம்: மலேசிய ஊடகம்
Google News Preferred Icon

கெடா: தீயணைப்பானைக் கைகளில் ஏந்தியவாறு பல்பொருள் கடை ஒன்றுக்குள் புகுந்த இருவர், கொள்ளையடிக்க முயன்றதை அடுத்து அவ்விரு சந்தேக நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

மலேசியாவின் கெடா மாநிலத்திலுள்ள குவார் செம்பேடாக் பகுதியில் ஜனவரி 25ஆம் தேதியன்று இரவு 7.25 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

கறுப்பு நிறத் தொப்பி சட்டை அணிந்த இருவரும் கடையில் கொள்ளையடிப்பதைக் காட்டும் சிசிடிவி காணொளி தற்போது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

தீயணைப்பான் மூலம் தூளை அவர்கள் தெளிப்பதாகவும் கடைக்காரரான ஒரு மாது கீழே உட்கார்ந்தபடி பணத்தைப் பாதுகாக்க முயல்வதாகவும் காணொளியில் தெரிகிறது.

இருப்பினும், கடைக்காரரின் பணம் பறிபோனது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகொள்ளைதீயணைப்புதிருட்டுகாவல்துறை