காதலிலே தோல்வியுற்றார்; ஆடைகளைத் துறந்து நடந்தார்

காதலிலே தோல்வியுற்றார்; ஆடைகளைத் துறந்து நடந்தார்

1 mins read
daeb5ba0-ac89-4d2d-9a04-bee935f2da05
துயரம் தாங்காமல் ஆடவர் அவ்வாறு காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

ஜோகூர் பாரு: பொது இடத்தில் ஆடைகளின்றி காணப்பட்ட 37 வயது ஆடவர் ஒருவரை ஜோகூர் பாரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆடவர் ஜனவரி 19ஆம் தேதியன்று பின்னிரவு 1.38 மணிக்குக் கைதானதாகக் காவல்துறை தெரிவித்தது.

ஆடவர் ஆடை எதுவும் அணியாமல் இங்குமங்கும் நடந்துகொண்டிருப்பதாக 26 வயது பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து கூறப்பட்ட அந்தப் பகுதிக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.

தன்னுடைய காதலி தன்னை விட்டுப் பிரிந்த துயரை ஆடவரால் தாங்க முடியவில்லை என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த ஆடவர் மதுபானம் அருந்தியதாகவோ போதைப்பொருள் உட்கொண்டதாகவோ தெரியவில்லை என்றும் இதற்குமுன் அவருக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததில்லை என்றும் கண்டறியப்பட்டது.

இதற்கிடையே, ஆடவர் ஆடைகளின்றி வலம்வருவதைக் காட்டும் காணொளி பரவலாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஜோகூர் பாருகாதல்ஆடைமனநலம்