‘மருத்துவக் காரணங்களுக்கு மட்டும் கஞ்சா’

‘மருத்துவக் காரணங்களுக்கு மட்டும் கஞ்சா’

1 mins read
240a519d-0bb9-40fb-bf3f-c0de0ff416a2
பேங்காக்கில் பிரபலமான இடத்தில் கஞ்சா விற்கும் கடையை சுற்றுலாப் பயணிகள் கடந்து செல்கின்றனர். - படம்: இபிஏ
Google News Preferred Icon

பேங்காக்: மருத்துவக் காரணங்களுக்கு மட்டும் கஞ்சா பயன்படுத்துவதை அனுமதிக்கும் மசோதாவை தாய்லாந்து அரசாங்கம் இறுதி செய்து வருகிறது.

இது பற்றி பேசிய பொதுச் சுகாதார அமைச்சர் சோல்னான் ஸ்ரீகாவ், கஞ்சா புகைப்பதற்கு மருத்துவர் குறிப்பு அவசியம் என்று தெரிவித்துள்ளதாக பேங்காங் போஸ்ட் குறிப்பிட்டது.

மருத்துவ நோக்கத்திற்கு கஞ்சா செடியை எந்த வகையில் பயன்படுத்துவது என்பதை மசோதா தெளிவுபடுத்தும் என்று அவர் கூறினார்.

எங்கு, எப்படி, எங்கே விற்கப்படும் போன்ற விவரமும் அது விவரிக்கும். கஞ்சா செடியின் எந்தப் பகுதி பயன்படுத்தப்படும் என்பதும் தெரிய வரும்.

கஞ்சா புகைப்பது சுகாதாரத்துக்கு நல்லது என்றால் அதற்கு தெளிவான மருத்துவர் குறிப்பு அவசியம் என்று டாக்டர் சோல்னானை மேற்கோள்காட்டி பேங்காக் போஸ்ட் கூறியது.

குறிப்புச் சொற்கள்
கஞ்சா