19 தங்கச் சுரங்கங்கள் வெடிவைத்துத் தகர்ப்பு

19 தங்கச் சுரங்கங்கள் வெடிவைத்துத் தகர்ப்பு

1 mins read
c927fd08-5bcb-4c1d-8cb4-ac4b2368ec31
பிரேசிலில் செயல்படும் சட்டவிரோத சுரங்க முகாமைக் காட்டும் படம். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

பொகோடா: அமேசன் காடுகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 19 தங்கச் சுரங்கங்களை கொலம்பியாவும் பிரேசிலும் அழித்துள்ளன.

இவை மாதத்துக்கு ஏறக்குறைய 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அளவிலான தங்கத்தை உற்பத்தி செய்வதாகவும் ஆறுகளை பாதரசத்தால் மாசுபடுத்துவதாகவும் கொலம்பிய ஆயுதப்படைகள் தெரிவித்தன.

சட்டவிரோத சுரங்கங்களின் மாதாந்திர உற்பத்தி 23 கிலோகிராம் (50.71 எல்பி) என்றும் கொலம்பிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமேசன் மழைக்காடுகளில் செயல்பட்டுவரும் சட்டவிரோத தங்க சுரங்கங்கள் தங்கத்தை பிரித்து எடுப்பதற்காக பாதரசம் மூலம் ஆறுகளில் சுத்திகரிப்பு வேலையை செய்கின்றன.இதனால், குடிநீர் வளமான ஆறு முற்றிலும் மாசுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வந்ததை அடுத்து, கொலம்பிய ஆயுதப்படை அமேசன் காட்டுக்குள் சோதனை வேட்டை நடத்தி, 19 தங்கச் சுரங்கங்களை கண்டுபிடித்தனர்.

பிரேசிலும் இம்முயற்சியில் இணைந்தது. அச்சுரங்கங்களை வெடி வைத்துத் தகர்த்து இருப்பதாக கொலம்பியா அரசு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
தங்கம்சுரங்கம்