பாரிஸ் நகரில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்; ஒருவர் மரணம்

பாரிஸ் நகரில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்; ஒருவர் மரணம்

1 mins read
d7798257-b189-43c4-8eea-a84961cce2a0
கத்திக் குத்து சம்பவத்தைத் தொடர்ந்து டிசம்பர் 3ஆம் தேதி பிர் ஹக்கிம் பாலத்தை சுற்றி வளைத்த காவல்துறை பாதுகாப்பை வலுப்படுத்தியது. - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: மத்திய பாரிஸ் நகரில் ஐஃபிள் டவர் அருகே சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், இரண்டு பேர் காயம் அடைந்தனர்.

காவல்துறையினர் உடனடியாக பிரெஞ்சு குடிமகனான 26 வயது சந்தேக நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

2016ஆம் ஆண்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதற்காக அந்த நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பிரெஞ்சு பாதுகாப்பு சேவையின் கண்காணிப்புப் பட்டியலில் அவர் இடம்பெற்று இருந்தார். அவருக்கு மனநலக் கோளாறு இருந்தது என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று உள்ளூர் நேரப்படி மாலை 7 மணியளவில் தாக்குதல் நடைபெற்றது. சம்பவம் ஐஃபிள் டவருக்கு அருகே நிகழ்ந்தது. மாண்டவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானிலும் பாலஸ்தீனத்திலும் பல முஸ்லிம்கள் இறந்து கொண்டிருப்பதால் தான் வருத்தமடைந்துள்ளதாக அவன் காவல்துறையிடம் கூறியிருக்கிறார்.

பயங்கரவாத எதிர்ப்பு வழக்கரிஞர் அலுவலகம் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.

பிரான்சில் இன்னும் எட்டு மாதங்களில் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெறவிருக்கும் வேளையில் தலைநகர் பாரிசின் மத்திய பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்டுள்ளனர்.

இதனால் உலகளாவிய போட்டி நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்