சென்னை மெட்ரோ நிறுவனம் லண்டனின் கிரீன் ஆப்பிள் விருதை வென்றது

1 mins read
7de7503b-5921-4378-969b-2d72def72d5b
சென்னை மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ள மெட்ரோ ரயில் சேவை. - கோப்புப் படம்

சென்னையின் மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து, பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. லட்சக்கணக்கானோர் நாள்தோறும் மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனர். சென்னையில் மெட்ரோ ரயிலை மேம்படுத்த பல புதிய தடங்களை உருவாக்கும் பணிகளும் மும்முரமாகியுள்ளன.

சென்னை பொதுமக்களின் அமோக வரவேற்பைப்பெற்றுள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு லண்டனின் பசுமை அமைப்பு கிரீன் ஆப்பிள் எனப் பெயரிடப்பட்ட விருதினை வழங்கி பாராட்டியுள்ளது. கரியமில வாயுவை குறைப்பதற்கான பிரிவில் அந்த விருதை சென்னை மெட்ரோ நிறுவனம் வென்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்