நார்வே நாவல் ஆசிரியருக்கு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு

1 mins read
200581d7-5998-497e-be96-ca2f71f622ff
நார்வே நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரும் நாடக ஆசிரியருமான ஜான் ஃபோஸ்சி இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றிருக்கிறார். - படம்: ஏஎஃப்பி 

ஸ்டாக்ஹோம்: நார்வே நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரும் நாடக ஆசிரியருமான ஜான் ஃபோஸ்சி இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றிருக்கிறார்.

சுவீடனைச் சேர்ந்த அந்த அமைப்பு இதனை வியாழக்கிழமை அறிவித்தது.

வெளியே கூற இயலாதவற்றுக்காக குரல்கொடுத்த அவருடைய புத்தாக்க நாடகங்கள், நாவல்களுக்காக அந்தப் பரிசு வழங்கப்படுகிறது என்று அந்த அமைப்பு கூறியது.

இதனிடையே, நோபெல் பரிசு கிடைத்தது பற்றி கருத்து கூறிய ஜான் ஃபோஸ்சி, 64, தனக்கு அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டது என்றும் தான் கொஞ்சம் பயந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இந்தப் பரிசு இலக்கியத்திற்குக் கிடைத்து இருக்கும் பரிசு என்றே தான் கருதுவதாக அவர் கூறினார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்