எல்மினா விமான விபத்து: ஆரம்பகட்ட அறிக்கை 30 நாள்களில் தயாராகிவிடும்

எல்மினா விமான விபத்து: ஆரம்பகட்ட அறிக்கை 30 நாள்களில் தயாராகிவிடும்

1 mins read
930a265a-68f8-4f62-9aca-836b6974e9b7
விமான விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

புத்ராஜெயா: அண்மையில் மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் தனியார் விமானம் ஒன்று சாலையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஆறு பயணிகள், இரண்டு விமானச் சிப்பந்திகள், ஒரு மோட்டார் சைக்கிளோட்டி, வாகனம் ஓட்டி ஒருவர் ஆகிய பத்து பேர் மாண்டனர்.

விபத்துக்குள்ளான விமானம் லங்காவியிலிருந்து சுபாங்கிற்குச் சென்றுகொண்டிருந்தது.

இதற்கிடையே, இந்த விமான விபத்து தொடர்பான ஆரம்பகட்ட அறிக்கை 30 நாள்களுக்குள் தயாராகிவிடும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் முன்வந்து நடந்தவற்றைப் பற்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான காணொளி பதிவுகள் அல்லது படங்கள் இருந்தால் அதை விமான விபத்து விசாரணைப் பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சு கேட்டுக்கொண்டது.

இதற்கிடையே, விமான விபத்தில் மாண்டோரின் படங்களையோ அல்லது காணொளிகளையோ சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களிடம் அமைச்சு கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்
மலேசியா