மகாதீர்: நான் நலமாக இருக்கிறேன்

மகாதீர்: நான் நலமாக இருக்கிறேன்

1 mins read
b0014a9a-e32c-4844-9399-c5bc062aef2d
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வசம் இப்போது இருக்கும் மூன்று மாநிலங்களில் அது தோற்றுவிட்டால் மக்கள் பக்கத்தான் ஹரப்பானை நிராகரித்துவிட்டனர் என்பதை அந்தக் கூட்டணி உணர்ந்துகொள்ள வேண்டும் என்று டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 
Google News Preferred Icon

அலோர் ஸ்டார்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது சனிக்கிழமை காலை தன்னுடைய துணைவியார் சித்தி ஹஸ்மாவுடன் கெடா மாநிலத்தில் உள்ள அனாக் புக்கிட் சட்டமன்றத் தொகுதியில் வாக்களித்தார்.

அதற்குப் பிறகு 98 வயது டாக்டர் மகாதீர் செய்தியாளர்களிடம் பேசினார்.

காலையிலும் முற்பகல் நேரத்திலும் அதிகமான வாக்காளர்களைக் காண முடியவில்லை என்று தெரிவித்த டாக்டர் மகாதீர், வாக்களிப்பு மையங்கள் மூடப்படுவதற்கு முன்னர் வாக்காளர்கள் திரண்டு வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.

உடல்நிலை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அவர், இப்போது தான் மிகுந்த உடல்நலத்துடன் இருப்பதாகக் கூறினார்.

டாக்டர் மகாதீர் தொற்று காரணமாக அண்மையில் தேசிய இதய நலக் கழகத்தில் சிகிச்சை பெற்றார்.

குறிப்புச் சொற்கள்