பாலி செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு $13 பயண வரி

பாலி செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு $13 பயண வரி

1 mins read
0823c5cd-7120-47ec-9e48-03759ed91f31
பாலித் தீவில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பயண வரி 2024ஆம் ஆண்டு முதல் நடப்புக்கு வரும். - படம்: இபிஏ- இஎஃப்இ
Google News Preferred Icon

பாலி: இந்தோனீசியாவின் பாலித் தீவுக்குச் செல்லும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் 150,000 ரூப்பியா (13.32 சிங்கப்பூர் வெள்ளி) பயண வரி செலுத்த வேண்டும்.

பாலியின் கலாசாரத்தைக் காக்க அந்த வரி விதிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பயண வரி 2024ஆம் ஆண்டு முதல் நடப்புக்கு வரும்.

பாலித் தீவின் பொருளியலுக்குப் பலமாக பயணத்துறை உள்ளது. ஆண்டிற்குப் பல மில்லியன் சுற்றுலாப் பயணிகளை பாலி ஈர்க்கிறது.

வரிப் பணம் மின்னிலக்க முறையில் வசூலிக்கப்படும் என்றும் பயணிகள் பாலிக்குள் நுழைவதற்கு முன்னர் பணம் செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறினர். 

இந்தோனீசியாவின் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு  புது வரி பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

கொவிட்-19 நோய்ப்பரவல் காரணமாக நலிவடைந்துள்ள பாலியின் சுற்றுலாத்துறை தற்போது முழுவீச்சில் பழைய நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்நிலையில் இப்போது புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்