பார்வையற்றோரின் நிலையை அறிய விசித்திரமான ஒரு முயற்சி

பார்வையற்றோரின் நிலையை அறிய விசித்திரமான ஒரு முயற்சி

1 mins read
a78f144e-5a00-42f8-9972-d463f4cb8eb2
கோலாலம்பூர் காவல்துறைத் தலைமை ஆணையர் முகம்மது ஷுஹைலி முகம்மது ஸேன் தமது கண்களை மூடிக்கொண்டு பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள ஜாலான் தம்பிபிள்ளை நடைபாதையில் நடந்துசென்றார். - படம்: தி ஸ்டார்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: பார்வையற்றோர் எதிர்நோக்கும் சிரமங்களைப் புரிந்துகொள்ள, கோலாலம்பூர் காவல்துறைத் தலைமை ஆணையர் முகம்மது ஷுஹைலி முகம்மது ஸேன் தமது கண்களை மூடிக்கொண்டு பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள ஜாலான் தம்பிபிள்ளை நடைபாதையில் நடக்க முயற்சி செய்தார்.

அவருடன் காவல்துறையின் தற்காலிகத் துணைத் தலைமை மூத்த ஆணையர் ஹபிபி மஜின்ஜியும் மற்ற மூத்த அதிகாரிகளும் சென்றனர்.

நடைபாதையைப் பராமரிப்பதில் பொதுமக்கள் மேலும் பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும் என்று ஆணையர் ஷுஹைலி கூறினார். நடைபாதையில் தங்கள் வாகனங்களை நிறுத்திவைக்கும் சில சுயநலவாதிகள் இன்னும் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

மேலும், சாலையைப் பயன்படுத்துவோர் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவார்கள் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
கோலாலம்பூர்