ஹாங்காங் ஊடகத் தலைவருக்கு சிக்கல் அதிகரிக்கிறது

1 mins read
5df8544d-e142-47f2-8440-7233d96d427a
-

ஹாங்­காங்: ஹாங்­காங்­கின் ஊடகத் தலை­வ­ரான ஜிம்மி லாய்க்கு சிக்­கல் அதி­க­ரித்­துள்­ளது.

தேசி­யப் பாது­காப்பு சட்­டத்­தின் கீழ் சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்ள அவ­ரது வழக்கு சீனா­வுக்கு மாற்றப்­ ப­ட­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வதே அதற்கு கார­ணம்.

கடந்த 2020ல் ஹாங்­காங்­கில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட தேசிய பாது­காப்­புச் சட்­டம், சிக்­க­லான வழக்கு­ களை சீனா­வுக்கு மாற்ற அதி­கா­ரம் அ­ளிக்­கிறது. ஆனால் சீனா, இது­வரை அந்த அதி­கா­ரத்­தைப் பயன்­ ப­டுத்­த­வில்லை. ஹாங்­காங்­கி­லேயே வழக்கு­களை நடத்தி வரு­கிறது.

முந்­தைய பிரிட்­டிஷ் கால­னி­யான ஹாங்­காங்­கின் வெளிப்­ப­டைத் தன்மை, நீதித் துறை சுதந்­தி­ரம், குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வ­ருக்கு உள்ள உரிமை போன்ற தனிப்­பட்ட மர­பு ­க­ளுக்­காக லாயின் வழக்கை தலை­நி­லத்­துக்கு மாற்­றா­மல் சீனா பொறுமையாக இருந்து வரு­கிறது.

'ஆப்­பிள் டெய்லி' நிறு­வ­ன­ரான ஜிம்மி லாய்க்கு பிரிட்­டிஷ் வழக்­க­றி­ஞரை அமர்த்த கடந்த வாரம் ஹாங்­காங்­கின் உச்ச நீதி­மன்­றம் அனு­ம­தி­ அ­ளித்­தது.

ஆனால் பெய்­ஜிங்­கால் நிய­மிக்­கப்­பட்ட ஹாங்­காங்கின் தலைமை நிர்­வா­கி­யும் சீனா­வின் விசு­வா­சி­யு­மான ஜான் லீ, இது­போன்ற வழக்கு­களில் வெளி­நாட்டு வழக்­ க­றி­ஞர்­கள் பங்­கேற்­பதை தடுக்க தலையிட வேண்­டும் என்று சீனா­வின் உயர்­மட்ட சட்­டக்­கு­ழுவை கேட்­டுக்கொண்­டுள்­ளார்.

மேலும் உள்­ளூர் வழக்­க­றி­ஞரை நிய­மிக்க முடி­யாத வழக்­கு­களை சீனா­வின் நீதி­மன்­றத்­திற்கு மாற்ற வேண்­டும் என்­றும் யோசனை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னால் ஜிம்மி லாயின் வழக்கு சீனா­வுக்கு மாற்­றப்­ப­ட­லாம் என்ற அச்­சம் எழுந்­துள்­ளது. ஆனால் இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.