நாசா பகிர்ந்த 'சிரிக்கும்' சூரியன் படம், ஆனால் இது சிரிப்புக்கானதல்ல

நாசா பகிர்ந்த 'சிரிக்கும்' சூரியன் படம், ஆனால் இது சிரிப்புக்கானதல்ல

1 mins read
b2fe4be2-0767-45c3-ac1f-5a6673657eaf
சூரியன் புன்னகை செய்வதுபோல இருக்கும் ஒரு படத்தை அண்மையில் நாசா பகிர்ந்துகொண்டது. படம்: டுவிட்டர்/நாசா -
Google News Preferred Icon

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா, புற ஊதாக் கதிரில் (ultraviolet light) காணக்கூடிய சூரியனின் படத்தை அண்மையில் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.

கேலிச் சித்திரக் கதைகளில் சித்திரிக்கப்படுவதுபோலவும் சிரிப்பைப் பிரதிபலிக்கும் 'இமோஜி' எனப்படும் குறியீடு போன்றும் சூரியன் அதில் காணப்படுகிறது.

ஆனால் இது குளிர்ச்சியான கருந்துளைகளைக் (dark patches) காட்டுவதாகவும் இவற்றின்வழி மணிக்கு 2.9 மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில் வெப்பக் காற்று விண்வெளியில் பாய்கிறது.

இந்தக் கருந்துளைகள் பொதுவாக நம் கண்களுக்குத் தெரியாது. புற ஊதா ஒளியில் மட்டுமே இவை காணப்படுகின்றன என்று நாசா விளக்கியது.

பூமிக்கு இது மகிழ்ச்சிச் செய்தி அல்ல என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.