ஈரானில் 'ஹிஜாப்'புக்கு ஆதரவாகப் பேரணி

ஈரானில் 'ஹிஜாப்'புக்கு ஆதரவாகப் பேரணி

1 mins read
4e47e83a-83ac-44db-b8cd-a83387c67eb6
-
Google News Preferred Icon

தெஹ்ரான்: 'ஹிஜாப்' எனப்படும் பெண்கள் அணியும் தலையங்கிக்கு ஆதரவு தெரிவித்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நேற்று நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அண்மையில் தலையங்கி அணியாததற்கு ஈரானிய அறநெறிப் பிரிவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்ட 22 வயது மாஹ்சா அமினி கோமா நிலைக்குச் சென்று பிறகு மாண்டதை அடுத்து, ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதில் குறைந்தது 17 பேர் மாண்டனர்.

சமயத்துக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுவோரைக் கண்டித்து பேரணி நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.