ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் நிலநடுக்கம்

1 mins read
5cac07d2-725f-4aa5-8a9b-bfc54d8de576
-
Google News Preferred Icon

தோக்கியோ: ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள கியூஷூ தீவு கடற்கரையையொட்டி நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிலர் காயமடைந்தனர். ரிக்டரில் 6.4ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள், சாலைகள் சேதமடைந்தன.

அண்டை மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் அது கூறியது.