மலேசியாவில் பூஸ்டர் தடுப்பூசிக்காக காத்திருப்பு காலம் குறைப்பு

மலேசியாவில் பூஸ்டர் தடுப்பூசிக்காக காத்திருப்பு காலம் குறைப்பு

1 mins read
43373ce2-5808-4274-bf0c-58540156bb2a
படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

மலேசியாவில் ஓமிக்ரான் உருமாறிய கொவிட்-19 கிருமி பரவிவரும் வேளையில், பூஸ்டர் தடுப்பூசிக்கான இடைவெளியை அந்நாடு குறைத்துள்ளது.

இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு மூன்று மாதங்களில் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள பெரியவர்கள் அனைவரும் தகுதிபெறுவார்கள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 28) அறிவித்தார். இந்த இடைவெளி தற்போது ஆறு மாதங்களாக உள்ளது.

பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன், சரவாக் மாநிலத்தில் நன்கு தென்பட்டுள்ளதாக திரு கைரி சொன்னார். அங்குள்ள பெரியவர்களில் பாதிக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட பிறகு, அம்மாநிலத்தில் தொற்றுப் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதை அவர் சுட்டினார்.