ஜப்பானில் கடும் பனிப்பொழிவு; போக்குவரத்து சேவைகள் தடை

1 mins read
d0ad63f8-7761-4661-abc7-38fc9cf9396a
-

ஜப்பானில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அனைத்து விதமான போக்குவரத்துகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மத்திய ஜப்பானில் சாலைப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ரயில், விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரத்தில் 64 செ.மீட்டர் உயரத்திற்கு பனிப்பொழிவு இருந்தது. இது சராசரியைவிட 30 மடங்கு அதிகமாகும். மின் தடை காரணமாக 3,200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதிப்படுகின்றன. இந்நிலையில் பனிப்பொழிவு மேலும் கடுமையாகக்கூடும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் சொன்னார்.

படம்: ராய்ட்டர்ஸ்