ரஷ்ய பள்ளியில் வெடிகுண்டு தாக்குதலை நடத்திய மாணவர்

ரஷ்ய பள்ளியில் வெடிகுண்டு தாக்குதலை நடத்திய மாணவர்

1 mins read
95f33d55-1422-475e-a480-6f9c8f14df9f
-
Google News Preferred Icon

ரஷ்யாவில் சமயப் பள்ளி ஒன்றைச் சேர்ந்த 18 வயது மாணவர், தற்கொலை தாக்குதலை நடத்த முயன்றதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்தது.

செர்புகோவ் நகரிலுள்ள விவெடென்ஸ்கி விளாடிச்னி சமயப்பள்ளியைச் சேர்ந்த அந்த மாணவர், வெடிகுண்டுடன் அந்தப் பள்ளியின் உடற்பயிற்சிக் கூடத்திற்குள் சென்று அந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக அமைச்சு தெரிவித்தது.

இச்சம்பவத்தில் எழுவர் காயமடைந்தபோதும் தாக்குதல்காரன் உட்பட எவரும் உயிரிழக்கவில்லை.