இந்தியாவில் கிருமித்தொற்று இறங்குமுகம்; வர்த்தகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின

இந்தியாவில் கிருமித்தொற்று இறங்குமுகம்; வர்த்தகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின

1 mins read
9b9f4eb6-5da0-4de5-beb8-ef294bdd3bfe
புதுடெல்லி சாலைகளில் போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

இந்தியாவின் முக்கிய நகரங்களில் வர்த்தகங்கள் இன்று (ஜூன் 7) மீண்டும் செயல்படத் தொடங்கின.

நிதி மையமான மும்பையில் பேருந்துகளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்றனர். தலைநகர் புதுடெல்லியில் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 100,636 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதியானது. ஏப்ரல் 6ஆம் தேதிக்குப் பிறகு அந்நாட்டில் பதிவாகியுள்ள ஆகக் குறைவான எண்ணிக்கை இது. இதனால், பொருளியல் நடவடிக்கைகள் படிப்படியாக செயல்படத் தொடங்கியுள்ளன.

இந்தியாவில் மேலும் 2,427 பேர் கிருமித்தொற்றுக்கு உயிரிழந்தனர்.

எனினும், கிருமித்தொற்று மற்றும் மரண எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதைவிட ஒரு சில மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்