காட்டுத் தீ: இந்தோனீசிய அதிபர் எச்சரிக்கை

காட்டுத் தீ: இந்தோனீசிய அதிபர் எச்சரிக்கை

1 mins read
565d0189-1b94-49e4-800f-49be73312b88
இவ்வாண்டு காட்டுத் தீயால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் அதை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ எச்சரிக்கை விடுத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

இவ்வாண்டு காட்டுத் தீயால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் அதை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் ஆங்காங்கே காட்டுத் தீ தென்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

அண்மைய ஆண்டுகளில் இந்தோனீசியாவில் மிகப் பெரிய அளவிலான காட்டுத் தீச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

அவற்றின் காரணமாக ஓராங் உத்தான், புலிகள் போன்ற அருகிவரும் விலங்குகள் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டது. 96 விழுக்காடு காட்டுத் தீ சம்பவங்கள் மனிதர்களால் ஏற்படுகின்றன. கவனக்குறைவால் அல்லது வேண்டுமென்றே காட்டுத் தீ சம்வபவங்கள் ஏற்படுத்தப்படுகின்றன," என்று அதிகாரிகளுடன் நடத்திய மெய்நிகர் கலந்துரையாடலின்போது அதிபர் ஜோக்கோவி தெரிவித்தார்.

பணத்தை மிச்சப்படுத்த அடுத்த பயிரிடுதலுக்குத் தயாராகும் நோக்கில், நிலத்தில் உள்ள மரம், பயிர் எச்சங்களை விவசாயிகள் தீவைத்து கொளுத்திவிடுவதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்