தொற்று நெருக்கடி கட்டுப்பாட்டைத் தளர்த்தியது தென்கொரியா

தொற்று நெருக்கடி கட்டுப்பாட்டைத் தளர்த்தியது தென்கொரியா

1 mins read
7fae52e1-7149-4a21-9a0b-c861e5298e3a
படம்: ஏஃப்பி -
Google News Preferred Icon

தென்கொரியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கடுமையான சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அந்நாடு தளர்த்தியுள்ளது.

அத்துடன் முதல் கட்ட தடுப்பூசி போடும் பணியை இந்த மாதத்தில் தொடங்கும் திட்டம் குறித்தும் தென்கொரியா அறிவிக்கவுள்ளது.

தென்கொரியாவின் சந்திரப்புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர், நேற்று புதிய தொற்று எண்ணிக்கை 344ஆகக் குறைந்தது.

இது அதற்கு முன்னர் நாள்தோறும் தொற்றுக்குப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 400ஐ தாண்டிய நிலையில் இருந்தது.

அதனையடுத்து தென்கொரியா, தொற்று நெருக்கடி கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. அத்துடன் பிப்ரவரி 26ஆம் தேதி தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்க இருப்பதாக கொரியாவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு முகவை தெரிவித்தது.