கேளிக்கைப் பூங்காவில் கயிறு அறுந்து விபத்து; 16 பேர் காயம், மூவர் கவலைக்கிடம்

கேளிக்கைப் பூங்காவில் கயிறு அறுந்து விபத்து; 16 பேர் காயம், மூவர் கவலைக்கிடம்

1 mins read
d68dd165-df28-4e17-bac1-7fe5c400598d
கேளிக்கைப் பூங்கா ஒன்றில் ஊஞ்சல் விளையாட்டின் கயிறு அறுந்து ஏற்பட்ட விபத்தில் 16 பேர் காயமடைந்தனர்; மூவர் கடுமையான காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டது. படம்: ஊடகம் -
Google News Preferred Icon

கேளிக்கைப் பூங்கா ஒன்றில் ஊஞ்சல் விளையாட்டின் கயிறு அறுந்து ஏற்பட்ட விபத்தில் 16 பேர் காயமடைந்தனர்; மூவர் கடுமையான காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டது.

சீனாவின் ஹூனான் மாகாணத்தில் நேற்று இந்த விபத்து நேர்ந்ததாக இன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஷாவோயாங் கவுன்டி கிராமத்தில், உள்ளூர் நேரப்படி, பிற்பகல் 3.40 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாடு இழந்து 'ஃபிளையிங் சேர்' எனப்படும் ஊஞ்சல் விளையாட்டில், ஈடுபட்டிருந்த சிலர் கீழே விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தின் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாகவும் அந்த கேளிக்கைப் பூங்கா மூடப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
சீனாவிபத்து