ஆஸ்திரேலியாவை வந்தடைந்த அமெரிக்க புறாவின் உயிருக்கு ஆபத்து

ஆஸ்திரேலியாவை வந்தடைந்த அமெரிக்க புறாவின் உயிருக்கு ஆபத்து

1 mins read
0d76164b-37b8-4ae1-a2df-f2ed5aec4123
'ஜோ' என்ற பெயர் கொண்ட புறா. படம்: இணையம் -
Google News Preferred Icon

பசிஃபிக் கடலைக் கடந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்தடைந்ததாக நம்பப்படும் புறா ஆஸ்திரேலியாவின் கெடுபிடியான குடிநுழைவுச் சட்டத்தால் கருணைக் கொலை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

'ஜோ' என்ற பெயர் கொண்ட அந்த பறவை அமெரிக்காவின் ஓரிகோன் மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் நிகழ்ந்த புறா பந்தயத்திலிருந்து காணாமல் போனது.

கிட்டத்தட்ட இரண்டு மாதகங்களுக்கு பின்னர் அது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அதன் காலில் இருந்த அடையாளக் குறிப்பை வைத்து அது அமெரிக்காவின் காணாமல் போன புறா என்று கூறப்பட்டது.

ஆஸ்திரேலியாவிற்கு எந்த வகை தாவரங்களையோ உயிரினங்களையோ எளிதில் கொண்டு வர முடியாது. முறையான அனுமதி வாங்கி அவை தனிமைப்படுத்தப்படவேண்டும். அதற்கான குடிநுழைவுச் சட்டங்கள் மிகவும் கெடுபிடியானவை.

ஆஸ்திரேலியாவின் இயற்கைப் பறவை இனத்திற்கும் பண்ணைப்பறவை துறைக்கும் இந்த புறாவினால் விளையக்கூடிய பாதிப்புகளின் காரணத்தினால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் அதிகாரிகள் சுட்டினர்.

இதற்குகிடையே அந்தப் புறாவின் காலில் இருக்கும் அடையாள அட்டை போலியானது என்று அமெரிக்க புறா பந்தய அமைப்பு தெரிவித்துள்ளதால் 'ஜோ' புறா ஆஸ்திரேலியவைச் சேர்ந்ததாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது.

அந்தப் புறாவைக் காப்பாற்ற ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் இணையத்தில் ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர்.