உலகம் முழுவதும் இயங்கிய கடத்தல் கும்பல் முறியடிப்பு; 46 குழந்தைகள் மீட்பு

உலகம் முழுவதும் இயங்கிய கடத்தல் கும்பல் முறியடிப்பு; 46 குழந்தைகள் மீட்பு

1 mins read
aaec017d-ff72-4894-aacc-04aed17160f9
படம்: ஊடகம் -
Google News Preferred Icon

குழந்­தை­க­ளைக் கடத்தி பாலி­யல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்ளாக்கிய கும்­பலை ஆஸ்­தி­ரே­லிய போலி­சார் முறி­ய­டித்­துள்­ள­னர்.

இந்த விவ­கா­ரத்­தில் மொத்­தம் 14 பேர் கைது செய்­யப்­பட்டு 46 குழந்­தை­கள் மீட்­கப்­பட்­டுள்­ள­னர். கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் பாலர் பரா­ம­ரிப்பு ஊழி­ய­ரும் காற்­பந்து பயிற்­று­விப்­பா­ள­ரும் அடங்­கு­வர்.

நியூ சவுத் வேல்ஸ், குவின்ஸ்­லாந்து, வெஸ்­டர்ன் ஆஸ்­தி­ரே­லியா ஆகிய வட்­டா­ரங்­களில் 16 மாதம் முதல் 15 வயது வரை­யி­லான குழந்­தை­களைக் குறி வைத்து கும்­பல் செயல்­பட்­ட­தாக போலி­சார் தெரி­வித்­த­னர்.

குழந்­தை­களிடம் பாலி­யல் துன்­பு­றுத்­தல்­களைச் செய்து படம்­பி­டித்து இணை­யம் வழி­யாக வெளி­யிட்டு அவர்­கள் வருமானம் ஈட்டினர்.

அமெ­ரிக்­கா­வில் மூவர் கைது செய்­யப்­பட்­ட­னர். ஐரோப்பா, ஆசியா, கனடா, நியூ­சி­லாந்து ஆகிய இடங்­களில் மற்ற சந்­தேக நபர்­கள் கைது செய்யப்பட்டனர் என்று போலிசார் கூறினர்.

பதி­னான்கு சந்­தேக நபர்­கள் மொத்­தம் 828 குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர்.

சந்தேக நபர்களில் முக்கியமான ஒருவர், நியூ சவுத் வேல்சில் உள்ள பாலர் பராமரிப்பு நிலையத்தில் பணி யாற்றி வந்தார். அவரது பொறுப்பில் 30 குழந்தைகள் இருந்ததாக போலி சார் கூறினர்.

அந்த 27 வயது ஆடவர் 300க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டு களை எதிர்நோக்குகிறார். இதில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றங்களும் அடங்கும். அவரது கூட்டாளியும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கு கிறார். பராமரிப்பு நிலையத்தில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் ளுக்கு சம்பவம் குறித்து விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் போலிசார் குறிப்பிட்டனர்.