டிரம்ப்: கமலா ஹாரிசை அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுத்தால் அது அவமானம்

டிரம்ப்: கமலா ஹாரிசை அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுத்தால் அது அவமானம்

1 mins read
443da087-99e8-457c-a671-fa5a0d640232
அமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசை அமெரிக்காவின் முதல் பெண் அதிபராகத் தேர்ந்தெடுத்தால் அது அவமானம் என வடக்கு கரோலினாவில் நடைபெற்றா பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். படங்கள்: ராய்ட்டர்ஸ், ஏஎஃப்பி -
Google News Preferred Icon

அமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசை அமெரிக்காவின் முதல் பெண் அதிபராகத் தேர்ந்தெடுத்தால் அது அவமானம் என வடக்கு கரோலினாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் திரு டிரம்ப், கமலா ஹாரிசை மக்கள் விரும்பவில்லை என்றும், அவர் ஒருபோதும் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக வர முடியாது என்றும் கூறினார்.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் திரு ஜோ பைடன், திருவாட்டி கமலா ஹாரிசை துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் இடது சாரியுடன் கைகோத்திருப்பதாக திரு டிரம்ப் தெரிவித்தார்.

கலிஃபோர்னியாவின் ஜூனியர் செனட்டராகவும் அந்த மாநிலத்தின் முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரியாகவும் இருந்த திருவாட்டி கமலா ஹாரிஸ், நாட்டின் முக்கிய பதவிகளில் ஒன்றுக்குப் போட்டியிடும் முதல் கருப்பின, இந்திய வம்சாவளி பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
கமலா ஹாரிஸ்அமெரிக்காதேர்தல்