தங்கம் சேர்க்கும் சீனா

தங்கம் சேர்க்கும் சீனா

1 mins read
Google News Preferred Icon

பெய்ஜிங்: கடந்த டிசம்பரில் மீண்டும் கொள்முதலை தொடங்கியதிலிருந்து சீனா 100 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை தனது இருப்பில் சேர்த்து, தங்கம் இருப்புள்ள அதிகாரபூர்வமான முக்கிய சேமிப்பகங்களில் ஒன்றாகி உள்ளது. சீன மக்கள் வங்கி (பிபிஓசி) தங்க சேமிப்பை 62.45 மில்லியனில் இருந்து 62.64 மில்லியன் அவுன்ஸ் ஆக ஆகஸ்ட்டில் அதிகரித்ததைத் தொடர்ந்து, சீனாவின் தங்கம் இருப்பு செப்டம்பரில் தொடர்ந்து 10வது மாதமாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சீனாவின் தங்க இருப்பை 93 பில்லியன் அமெரிக்க டாலராக (S$128.5பில்லியன்) உயர்த்தி உள்ளது. டன் அடிப்படையில், கடந்த ஒன்பது மாதங்களில் கிட்டத்தட்ட 99.8 டன் சேமிப்புடன் கூடுதலாக அண்மைய 5.9 டன் கொள்முதலும் சேர்ந்துள்ளது.