காதுக்குள் ஒன்பது நாட்கள் தங்கியிருந்த கரப்பான் பூச்சி

காதுக்குள் ஒன்பது நாட்கள் தங்கியிருந்த கரப்பான் பூச்சி

1 mins read
22380a45-176c-4d0f-bc95-67b30941bebc
-
Google News Preferred Icon

அமெரிக்க மாது ஒருவரின் காதில் புகுந்த ஒரு கரப்பான் பூச்சி கடைசியாக ஒன்பது நாட் களுக்குப் பிறகு முற்றிலும் அகற் றப்பட்டது. ஃபுளோரிடாவைச் சேர்ந்த கேத்தி ஹோலி என்ற பெண்மணி, தனக்கு நேர்ந்த சம்பவம் பற்றி 'செல்ஃப்' என்ற இணையத்தளத் தில் எழுதி இருக்கிறார்.

"மருத்துவர்கள் அதன் மூன்று உடற்பகுதிகளை வெளியில் எடுத் தார்கள். வீட்டுக்கு வந்துவிட் டேன். பிறகு ஒன்பது நாட்கள் கழித்து, வழக்கமாக எனது மருத்துவரைப் பார்க்கச் சென்ற போது என் காதில் ஏதோ அடைத் துக்கொண்டிருப்பதாக அவர் கூறினார். "உடனடியாக காது, மூக்கு, தொண்டை வல்லுநரை அதே நாளன்று நான் சென்று பார்க்க அந்த மருத்துவர் ஏற்பாடுகளைச் செய்தார். நானும் அந்த வல்லு நரிடம் விரைந்து சென்றேன். "அந்த வல்லுநர் என் காதைப் பரிசோதித்துவிட்டு காதுக்குள் இன்னமும் ஏதோ சிக்கியிருப்ப தாகவும் அவற்றை வெளியே எடுக்கவேண்டும் என்றும் தெரி வித்தார். பிறகு அவர் கரப்பான் பூச்சி தலை, மேல் உடல், கால்கள், அதன் உணர்வு மீசைகள் ஆகிய வற்றைக் காதிலிருந்து வெளியே எடுத்தார். "அதற்குப் பிறகுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முழுமையான முடிவு ஏற்பட்டது," என திருவாட்டி ஹோலி எழுதி இருக்கிறார்.

அமெரிக்க மாதுவும் அவரது இடது காதுக்குள் ஒன்பது நாட்கள் இருந்த கரப்பான் பூச்சியும். படம்: கேத்தி ஹோலி

முழு விவரம்: epaper.tamilmurasu.com.sg