ஜோகூர் பாருவில் நேற்று முன் தினம் நிகழ்ந்த கார் விபத்தில் 28 வயது சிங்கப்பூரர் ஒருவர் மரணம் அடைந்தார். அந்த ஆடவர் ஓட்டிய மெர்சிடிஸ் காரில் மற்றொரு சிங்கப்பூரரும் இரு வியட்னாமிய பெண்களும் இருந் தனர் என்றும் மலேசியாவின் சைனா பிரஸ் நாளிதழ் தெரிவித்தது. செவ்வாய்க்கிழமை இரவு 9.24 மணிக்கு இவ்விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக ஜோகூர் தீயணைப்பு, மீட்பு பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்தது. சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட அந்தக் கார் ஜாலான் வோங் ஆ ஃபூக் சாலையில் சென்று கொண் டிருந்தபோது, அதைக் கட்டுப்படுத்த ஓட்டுநர் தவறினார். காரில் இருந்த மற்ற மூவருக்கும் காயம் ஏற்பட்ட தால் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த அந்த சிங்கப்பூரர் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று அறியப் படுகிறது.
ஜோகூர் கார் விபத்தில் சிங்கப்பூரர் மரணம்
1 mins read

