கத்தார் நாட்டுக்கு அரபு நாடுகளின் நிபந்தனை

கத்தார் நாட்டுக்கு அரபு நாடுகளின் நிபந்தனை

1 mins read
Google News Preferred Icon

துபாய்: இம்மாதத் தொடக்கத்தில் கத்தார் நாட்டுடனான அரசதந்திர உறவுகளை முறித்துக்கொண்ட நான்கு அரபு நாடுகள் அந்நாட்டின் மீது தடைகளை விதித்தன. அந்தத் தடைகளை அகற்றுவதற்கு அந்த அரபு நாடுகள் சில நிபந்தனைகளை விதித்துள்ளன. மொத்தம் 13 நிபந்தனைகள் அடங்கிய பட்டியல் கத்தாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, துருக்கி ராணுவ தளத்தை மூடுவது, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது போன்றவை அந்த நிபந்தனைகளுள் அடங்கும். கத்தாருக்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை தொடங்க முயற்சி செய்து கொண்டிருக்கும் குவைத் மூலம் இந்த நிபந்தனைப் பட்டியல் கத்தாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகள் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள், கத்தார் நாடு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டுகின்றன. இதனை கத்தார் மறுத்துள்ளது.