காதலர்கள் 20 பேர் வாங்கிக் கொடுத்த ஐஃபோன்களை விற்று வீடு வாங்கிய சீன மாது

1 mins read

ஷென்சென்: காதலர்கள் 20 பேர் ஆளுக்கு ஒன்றாக வாங்கிக் கொடுத்த 20 ஐஃபோன்களை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து ஒரு கிராமப்புற வீட்டையே விலைக்கு வாங்கியுள்ளார் ஒரு சீன மாது. சீனாவின் தென் ஷென்சென் மாநிலத்தில் சியாவ்லி (உண்மைப் பெயர் இதுவல்ல) என்ற மாது தான் காதலிக்கும் 20 ஆடவர் ஒவ்வொருவரிடமும் ஆகக் கடைசியாக விற்பனைக்கு வந்துள்ள ஐஃபோன் 7 ரக கைபேசிகளைப் பெற்றுக் கொண்டார்.

பின்னர் இதை விற்று இதில் கிடைத்த பணத்துக்கு கிராமப்புறப் பகுதியில் ஒரு வீடு வாங்குவதற்கான முன்பணம் கட்டியுள்ளார். இதை அந்த மாதின் தோழி ஒருவர் சீனாவின் பிரபல வலைத்தளம் ஒன்றில் அம்பலப்படுத்தி உள்ளதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. "இதைப் பற்றி பலரும் பேசுகின்றனர். அந்த மாதின் காதலர்கள் என்ன நினைப்பரோ," என்று கேள்வி எழுப்பியுள்ளார் தோழி.