ஜெர்மனியில் கோடரித் தாக்குதல் நடத்திய இளையர் சுட்டுக் கொலை

ஜெர்மனியில் கோடரித் தாக்குதல் நடத்திய இளையர் சுட்டுக் கொலை

1 mins read
Google News Preferred Icon

பெர்லின்: ரயில் வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்த வர்களைக் கோடரியாலும் கத்தி யாலும் தாக்கிய 17 வயது ஆப்கானிய ஆடவரை ஜெர்மன் போலிசார் சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை சுட்டுக் கொன்றனர். தெற்கு ஜெர்மனியில் உள்ள வுயேர்ஸ்பர்க் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்த ரயிலில் நடைபெற்ற இத்தாக்குதலின் விளைவாக குறைந்தது மூவர் படுகாயம் அடைந்ததாக ஜெர்மன் போலிசார் தெரிவித்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய பதின் மவயது ஆடவர் சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு அருகில் உள்ள வட்டாரத்தில் வசித்து வந்ததாக பவேரிய மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஜோக்கிம் ஹெர்மன் தெரிவித்தார்.

தாக்குதலை நடத்தியவர் இஸ்லாமிய பயங்கரவாதியாக இருக்கக்கூடும் என்று ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிவிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவரின் வீட்டில் சோதனை நடத்திய போலிசார், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் வரையப்பட்ட கொடி யைக் அங்கு கண்டெடுத்ததாக மூத்த மாநில அதிகாரி கூறினார். "ரயில் வண்டிக்குள் வந்ததும் அந்த ஆடவர் பயணிகளைக் கோடரியாலும் கத்தியாலும் தாக்கினார். நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. "மற்றவர்களுக்கு இலேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. தாக்குதலின் விளைவாக அதிர்ச்சி அடைந்த 14 பேருக்கு சிகிச்சை அளித்து வரப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர் தப்பிச் செல்லும் நோக்குடன் ரயில் வண்டியைவிட்டு வெளியேறினார். துரத்திச் சென்ற போலிசார் அவரைச் சுட்டுக் கொன்றனர்," என்று பவேரியப் போலிஸ் படையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.