சிட்னி: முதலை இழுத்துச் சென்ற பெண் மாயம்

சிட்னி: முதலை இழுத்துச் சென்ற பெண் மாயம்

1 mins read
b280d1a3-6aab-41a7-8336-9fd9a18f90da
-
Google News Preferred Icon

சிட்னி: ஆஸ்திரேலிய கடற்கரையில் இரவில் தோழியுடன் நீச்சலில் ஈடுபட்ட ஒரு பெண்ணை முதலை இழுத்துச் சென்று விட்டது. இதனால் அந்தப்பெண் இறந்திருக்கலாம் என்று அஞ்சுவதாக ஆஸ்திரேலிய போலிசார் நேற்றுத் தெரிவித்தனர். ஞாயிறு இரவு குயின்ஸ்லாந்து தெற்கே தோர்ன் டோன் கடற்கரையில் முதலை களுக்குப் பெயர்போன பகுதியில் நாற்பது வயதுகளில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய பெண் கள் நீச்சலில் ஈடுபட்டனர். "இழுக்கப்பட்ட தோழியை பாதுகாப்பான பகுதிக்கு இழுத்து வருவதற்காக மற்றொரு பெண் போராடினார். ஆனால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் சிறிது நேரத் தில் காணாமல் போனார்," என்று போலிசார் கூறினர்.