39 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் தென்கொரிய சகோதரிகள்

39 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் தென்கொரிய சகோதரிகள்

1 mins read
6208be79-d7ca-41db-9190-57868298420e
பிறப்பில் பிரிக்கப்பட்ட திருவாட்டி ஜீ வொன் ஹா (இடது), திருவாட்டி டேரக் ஹேனன் இருவரும் முதல் முறையாகச் சந்திக்கின்றனர். - படம்: THE KOREA HERALD / ஏசியா நியூஸ் நெட்வொர்க்
Google News Preferred Icon

சோல்: பிறப்பில் பிரிக்கப்பட்ட சகோதரிகள் இருவர் முதல் முறையாக தென்கொரியாவின் இன்சியோன் விமான நிலையத்தில் சந்தித்துள்ளனர்.

கைக்குழந்தைகளாக இருந்தபோதே, திருவாட்டி டேரக் ஹேனன் அமெரிக்காவிலும், திருவாட்டி ஜீ வொன் ஹா பெல்ஜியத்திலும் தத்துக் கொடுக்கப்பட்டனர்.

அண்மையில், ‘டிஎன்ஏ’ சோதனையின் மூலம் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் தெரிந்துகொண்டனர்.

திருவாட்டி ஹேனன் 1986ஆம் ஆண்டில் பிறந்ததும் மினசோட்டாவில் தத்துக்கொடுக்கப்பட்டு, அன்பான குடும்பத்திடம் வளர்ந்தார்.

இருப்பினும், திருவாட்டி ஹா சவால்மிக்கப் பயணத்தை எதிர்நோக்கினார். 1985ஆம் ஆண்டில் பிறந்த அவரை முதலில் கொரியக் குடும்பம் ஒன்று தத்தெடுத்தது. இருப்பினும், அவரின் பெற்றோர் விவாகரத்துச் செய்துகொண்டதால், அவரை 1987ஆம் ஆண்டில் பெல்ஜியக் குடும்பம் தத்தெடுத்தது.

அந்தக் குடும்பம் பின்னர் பொய்யான ஆவணங்களையும் நம்பகமற்ற வழிகளையும் பயன்படுத்தி ஏழு கம்போடியக் குழந்தைகளைத் தத்தெடுத்தது.

திருவாட்டி ஹா, பல்லாண்டுகள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்பட்ட பிறகு, 14வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி, ஆதரவற்றோர் இல்லங்களில் தமது பதின்ம வயதுப் பருவத்தைக் கழித்தார்.

‘டிஎன்ஏ’ சோதனையை எடுத்தபின், தமக்குச் சகோதரி இருப்பதை அறிந்த திருவாட்டி ஹா, திருவாட்டி ஹேனனுக்கு மின்னஞ்சல் அனுப்பினார்.

இந்நிலையில், சகோதரிகள் இருவரும் எதிர்வரும் நாள்களை சோலில் கழிக்க திட்டமிட்டுள்ளனர்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்
சோதனைதென்கொரியாசந்திப்பு