சிட்னி: பல்லி போன்ற ஊர்ந்துசெல்லும் உயிரினங்களைக் கடத்த முயன்ற ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவர்க்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த உயிரினங்களை அவர் மாச்சில்லுக் (பிஸ்கட்) கலன்களிலும் சோளப்பொரி (பாப்கார்ன்) பைகளிலும் மறைத்துவைத்து ஆஸ்திரேலியாவிலிருந்து கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, நீல் சிம்சன் என்னும் அந்த 61 வயது ஆடவர்க்கு எட்டாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
விலங்குகளைக் கடத்த முயன்றதற்காக அவருக்கு பிப்ரவரி 13ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் அத்தகைய 101 விலங்குகளை ஹாங்காங், தென்கொரியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குக் கடத்தவிருந்தார்.
அஞ்சல் பெட்டிகளுக்குள் அவ்விலங்குகள் இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவற்றை மீட்டு விசாரணை நடத்தினர்.
2018ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையில் 15 அஞ்சல்கள்மூலம் நீல் அவற்றைக் கடத்த முயன்றார்.
விலங்குக் கடத்தலில் நீலுக்குத் துணைபோன மூவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

