மத்தியக் கிழக்கிற்கான எல்லாப் பயணங்களையும் தவிர்க்கவும்: வெளியுறவு அமைச்சு

மத்தியக் கிழக்கிற்கான எல்லாப் பயணங்களையும் தவிர்க்கவும்: வெளியுறவு அமைச்சு

1 mins read
6abbb747-e87a-4889-b919-82151ce8324a
ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து வெடிப்பிலிருந்து கிளம்பிய புகையைக் காட்டிய காட்சி. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு, மத்தியக் கிழக்கிற்கான அனைத்துப் பயணங்களையும் தவிர்க்குமாறு சிங்கப்பூரர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது.

மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் உள்ள 15 பகுதிகளுக்கான பயண ஆலோசனைகளை அது ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) வழங்கியது. அமெரிக்காவும் இஸ்ரேலும் சனிக்கிழமை ஈரான்மீது போர் தொடுத்தன. பின்னர் ஈரானும் பதிலுக்குத் தாக்கியது.

புதிய பயண ஆலோசனைகள் வழங்கப்பட்ட வட்டாரங்கள்

ஈரான் இஸ்ரேல் எகிப்து ஈராக் சவூதி அரேபியா பாலஸ்தீன வட்டாரங்கள் சிரியா ஏமன் லெபனான் ஜோர்தான் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் பஹ்ரேன் ஓமான் குவைத் கத்தார்

அமைச்சின் பேச்சாளர் சனிக்கிழமை கூறியிருந்த கருத்துகளையும் சிங்கப்பூரர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மத்திய கிழக்கில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகங்கள், அங்குள்ள சிங்கப்பூரர்களைத் தொடர்ந்து தங்குமிடங்களில் இருக்குமாறும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த வட்டாரத்தில் வசிக்கும் அல்லது அதன் வழியாகச் செல்லும் சிங்கப்பூரர்களைச் சொந்தப் பாதுகாப்புக்காகத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும்படி அமைச்சு ஆலோசனை கூறியது.

தங்குமிடங்களுக்குள் இருப்பது, எச்சரிக்கப்படும்போது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது, செய்திகளை அணுக்கமாகக் கவனிப்பது, உள்ளூர் அரசாங்கத்தின் ஆலோசனைகளைப் பின்பற்றுவது முதலியவை அவற்றுள் அடங்கும்.

ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பயண ஆலோசனையில், தற்போது மத்தியக் கிழக்கில் இருக்கும் சிங்கப்பூரர்களை மின்பதிவு செய்துகொள்ளுமாறு அமைச்சு ஊக்குவித்தது.

தூதரக உதவி தேவைப்படுவோர் வெளியுறவு அமைச்சு அலுவலகத்தை (24 மணி நேரமும்) கீழ்க்காணும் முகவரியில் நாடலாம்:

வெளியுறவு அமைச்சு அலுவலகம் (24 மணி நேரமும்) முகவரி: தங்ளின், சிங்கப்பூர் 248163 தொலைபேசி: +65 6379 8800/8855 தொலைநகல்: +65 6476 7302 மின்னஞ்சல்: mfa_duty_officer@mfa.gov.sg

குறிப்புச் சொற்கள்
மத்திய கிழக்குஈரான்அமெரிக்காசிங்கப்பூர்பயணம்ஆலோசனைஇஸ்ரேல்