இது நடந்திருக்கக் கூடாது: பாகாங் சுல்தான்

இது நடந்திருக்கக் கூடாது: பாகாங் சுல்தான்

2 mins read
a445da03-7d2e-4b48-bfda-dddc4022fc54
தங்களைச் சுற்றியுள்ளவர்களின் நடத்தை மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பாகாங் சுல்தான் (இடது), பொதுமக்களை வலியுறுத்தினார். - படம்: மக்கள் ஓசை

செராட்டிங்: பாகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மது ஷா, செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) குவந்தான், செராட்டிங்கில் ஒரு நபர் தனது குடும்பத்தினரைக் கொன்று விட்டு தன் உயிரையும் மாய்ந்துக்கொண்டதாகக் கூறப்படும் துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

பாகாங் ஆட்சியாளர் இந்தச் சம்பவம் ஒரு முழு குடும்பத்தையும் உள்ளடக்கியது என்பதால் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகக் கூறினார்.

அவர் வெளியிட்ட பெர்னாமா அறிக்கையில், தங்களைச் சுற்றியுள்ளவர்களின் நடத்தை மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினார். “இது நடந்திருக்கக்கூடாது,” என்று அவர் கூறினார். பாகாங்கின் ஆட்சியாளராக, இதுபோன்ற போக்குகளைக் காட்டுபவர்களிடம் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்குமாறு பொதுமக்களைத் தாம் அறிவுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு முன்னதாக, பாகாங் காவல்துறைத் தலைவர் யஹ்யா ஓத்மான் கூறுகையில், “32 வயது நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தனது 28 வயது மனைவி, 55 வயது தாய் மற்றும் இரண்டு இளம் மகள்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. குவாந்தான், லோரோங் செராட்டிங் டமாய் பகுதியில் உள்ள ஒற்றை மாடி வீட்டின் சமையலறையில் அந்த நபரின் உடலும், படுக்கையறையில் அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தைகளின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன,” என்று கூறினார்.

சந்தேக நபரின் 15 வயது தம்பி வீட்டில் இருந்தபோது ஒரு சத்தம் கேட்டு அதிர்ச்சியூட்டும் தகவலைக் கண்டுபிடித்ததாக திரு யஹ்யா மேலும் கூறினார்.

அந்த நபர் கடந்த மாதம் சிலாங்கூரில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஒரு வாரத்திற்கு முன்புதான் குவாந்தானில் தனது புதிய வேலையைத் தொடங்கினார். பணப் பிரச்சினைகள் இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்குமோ என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்