கனடாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு

கனடாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு

1 mins read
107ac5d9-7f63-4ebf-b9e3-14c7378b29ed
குவைத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த நான்கு அமெரிக்கத் துணை ராணுவ வீரர்களின் படங்களை ஏந்தி கனடாவின் டொரோன்டோ நகரில் ஈரானின் முன்னாள் மன்னர், மறைந்த ஷா முகம்மது ரெஸா பஹ்லவியின் ஆதரவாளர்கள் சனிக்கிழமை (மார்ச் 7) ஒன்றுகூடினர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

டொரோன்டொ: கனடாவின் டொரோன்டோ நகரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) அடையாளம் தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

காலை 5.29 மணிக்கு சம்பவ இடத்தைச் சென்றடைந்த காவல்துறையினர், துப்பாக்கிச்சூட்டில் யாரும் காயமடையவில்லை என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.

இதன் தொடரில் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சும் டொரோன்டோ நகரிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகமும் உடனடியாக எக்கருத்தையும் வெளியிடவில்லை.

கனடியக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது என்றும் சந்தேகப் பேர்வழி பற்றிய எந்த விவரமும் இல்லை என்றும் மற்றொரு பதிவில் கூறியுள்ளனர். வேறு எந்த விவரங்களையும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணத்தையும் கனடியக் காவல்துறை வெளியிடவில்லை.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) நார்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நாட்டுவெடிகுண்டு ஒன்று வெடித்தது.

சந்தேகப் பேர்வழியைத் தேடி வருகிறோம் என்றும் விசாரணையில் ஈரானில் நடக்கும் போரும் குண்டுவெடிப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் நார்வே காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இஸ்லாமிய சமயத்துக்கு எதிராகக் கடந்த வார இறுதியில் நியூயார்க் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது நாட்டுவெடிகுண்டு வீசியதாக ஆடவர் இருவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்