உக்ரேனை மீண்டும் தாக்கும் ரஷ்யா; போரை நிறுத்தப்போவதில்லை எனச் சூளுரை

உக்ரேனை மீண்டும் தாக்கும் ரஷ்யா; போரை நிறுத்தப்போவதில்லை எனச் சூளுரை

2 mins read
17dd5f49-5c60-484a-9d72-66434e875c00
உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் சேதமடைந்து எரிந்து கொண்டிருக்கும் வாகனங்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கியவ்: ரஷ்யாவின் ஆளில்லா வானூர்திகளும் ஏவுகணைகளும் சனிக்கிழமை (நவம்பர் 29) அதிகாலையில் உக்ரேனியத் தலைநகர் கியவ் மீது தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் காயமடைந்தனர். 

அப்போது வெடிப்புகளின் சத்தம் கேட்டதுடன், ஆளில்லா வானூர்திகளின் சிதறல்கள் விழுந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

30 லட்சம் மக்கள் வாழும் தலைநகரின் ஆறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் பிற இருப்பிடங்கள் தாக்கப்பட்டதாகவும் கியவ்வின் ராணுவ நிர்வாகத் தலைவர் தைமூர் ட்ராட்செங்கோ கூறினார்.

தாக்குதல்களில் குழந்தை ஒன்று உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். 

நகர மையத்தின் மேற்கே உள்ள உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்த்தளங்களில் அந்தத் தாக்குதல் தீச்சம்பவத்தை விளைவித்ததாக நகர அதிகாரிகள் கூறிர். இதுபோன்ற தீச்சம்பவங்கள் மேலும் சில இடங்களில் நேர்ந்தன.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் சேதமடைந்து எரிந்து கொண்டிருக்கும் வாகனங்கள்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் சேதமடைந்து எரிந்து கொண்டிருக்கும் வாகனங்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

இதற்கிடையே, வரும் திங்கட்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ரஷ்யா செல்லவிருக்கிறார்.

உக்ரேனில் தனது போரை நிறுத்த ரஷ்யாவிடம் கேட்டுக்கொள்ள திரு வாங் முனைவார். ரஷ்யா உரிமை கேட்கும் பகுதிகளை உக்ரேன் விட்டுக்கொடுத்தால் அன்றி தாம் போரை நிறுத்தப்போவதில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வியாழக்கிழமை தெரிவித்தார். 

போரில் சீனா நேரடியான பங்காளி அல்ல என்றாலும் போருக்கான ஆயுதங்களை ரஷ்யாவுக்கு விநியோகம் செய்து வருவதாக உக்ரேன் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனைக் கடுமையாக மறுக்கும் சீனா, தன்னைச் சார்பற்ற சமாதானத் தூதராகக் காட்டிக்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பிரசல்சில் நடைபெறவுள்ள நேட்டோ வெளியுறவு அமைச்சர்களுக்கான சந்திப்பில் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ கலந்துகொள்ளப்போவதில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்
ரஷ்யாஉக்ரேன்தீச்சம்பவம்தாக்குதல்