புத்ரா ஹைட்ஸ் எரிவாயுக் குழாய் தீ விபத்து: 67 குடும்பங்களுக்கு வாடகை உதவி நீட்டிப்பு

புத்ரா ஹைட்ஸ் எரிவாயுக் குழாய் தீ விபத்து: 67 குடும்பங்களுக்கு வாடகை உதவி நீட்டிப்பு

1 mins read
7a67af81-6b8d-48c1-be7b-e3a74f65b97e
பாதுகாப்புக் காரணங்கள், வீடுகளின் கட்டுமான நிலை, நில உரிமை ஆவண சிக்கல்கள் காரணமாக இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: மலாய் மெயில்

ஷா ஆலம்: தற்காலிக வாடகை உதவியின் நான்காம் கட்டம், ஜனவரி முதல் மார்ச் 2026 வரை, சுபாங் ஜெயாவில் உள்ள புத்ரா ஹைட்ஸ் எரிவாயுக் குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 67 குடும்பத் தலைவர்களுக்கு நீட்டிக்கப்படும்.

பெட்டாலிங் வட்டாரம் மற்றும் நில அலுவலகம் நடத்திய அண்மைய மதிப்பீடுகள், தள வருகைகளைத் தொடர்ந்து, ஜனவரி 21ஆம் தேதி அன்று சிலாங்கூர் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் நீட்டிப்பு அங்கீகரிக்கப்பட்டதாக மாநில வீட்டுவசதி, கலாசாரக் குழுவின் தலைவர் போர்ஹான் அமன் ஷா தெரிவித்தார்.

மூன்றாம் கட்டத்தின்போது உதவி பெற்ற 123 குடும்பத் தலைவர்களில் 67 குடும்பங்களுக்கு நீட்டிப்பு பரிந்துரைக்கப்பட்டதாகவும், அண்மைய மதிப்பீடுகள், நிர்ணயிக்கப்பட்ட தகுதி அளவுகோல்களுக்கு இணங்கியதன் அடிப்படையில் 56 குடும்பங்களுக்கான உதவி நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“பாதுகாப்புக் காரணங்கள், வீடுகளின் கட்டுமான நிலை, நில உரிமை ஆவண சிக்கல்கள் காரணமாக இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவில்லை.

“பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு பாதுகாப்பாகக் கருதப்படும் வரை, கள மதிப்பீடுகளால் வழிநடத்தப்பட்டு, விவேகமான முறையில் அவர்களின் நலன் தொடர்ந்து கவனிக்கப்படுவதை உறுதி செய்வதில் மாநில அரசு உறுதியாக உள்ளது,” என்று திரு போர்ஹான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்