வார்சா: போலந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொடூரமான காணொளிகளை இணையத்தில் பதிவிடுவோர்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள சிறைத் தண்டனைகள் விதிக்கும் மசோதாவை வியாழக்கிழமை (ஜூன் 11) ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வன்முறை, பாலியல் வன்கொடுமை, கொலை, கொடூரக் குற்றங்கள், ஒருவரை அவமானப்படுத்துதல், விலங்குவதை போன்றவற்றை இணையத்தில் பதிவிடுவோருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க சட்டம் வழிவகுக்கும்.
இணையப் பதிவுகளைக் கட்டுப்படுத்தும் போலந்தின் நாடுதழுவிய பரவலான வகையில் மேற்கொள்ளப்படும் விரிவான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. அண்மையில் 16 வயதுக்குட்பட்டோர் பள்ளிகளில் கைப்பேசிகளை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.
பாலியல் சார்ந்தவற்றை பார்வையிடுவோருக்கு கடுமையான வயது வரம்புகளை சரிபார்க்கும் விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதும் அவற்றில் அடங்கும்.
தனிப்பட்ட குற்றமாக வகைப்படுத்துதல்
நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய விதிகளின்படி, கொலை அல்லது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடிய ஒளிபரப்புக் குற்றங்கள், ஒரு தனிப்பட்ட குற்றச்செயலாகவே வகைப்படுத்தப்படும்.

