லெபனானில் இந்தோனீசிய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு அதிபர் கண்டனம்

லெபனானில் இந்தோனீசிய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு அதிபர் கண்டனம்

1 mins read
8704bd6b-30ac-428a-9bfe-cf041eee06bb
ஐநா அமைதிப் படை வாகனம். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஜகார்த்தா: ஐநா அமைதிப் படையில் இடம்பெற்றுள்ள மூன்று இந்தோனீசியர்கள் தெற்கு லெபனானில் கொல்லப்பட்டதற்கு இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

லெபனானில் நிகழ்ந்த செயல் ஜகார்த்தாவின் வெளிநாட்டுப் படைகளுக்கு உள்ள அபாயங்கள் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது.

மோதல் நிகழ்ந்து வரும் தெற்கு லெபனான் வட்டாரத்தில் இரு வெவ்வேறு சம்பவங்களில் இந்தோனீசியப் படையினர் உயிரிழந்ததாக ஐநா அமைதிப் படைத் தலைவர் திங்கட்கிழமை (மார்ச் 30) கூறினார்.

இந்நிலையில் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தோனீசிய அதிபர் பிரபாவோ, தமது நாட்டு வீரர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்தார். அத்துடன், உயிரிழந்த வீரர்களின் உடலைத் தாயகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்