பிலிப்பீன்ஸ் நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை 46 ஆக உயர்வு

பிலிப்பீன்ஸ் நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை 46 ஆக உயர்வு

1 mins read
cb9f9a46-dfe8-47ef-9b50-183f49cd6f9e
ஜெனரல் சான்டோஸ் நகரில் சுவர் இடிந்து விழுந்த பகுதியில் சேதத்தை மக்கள் ஆராய்ந்தனர். - படம்: இபிஏ
Google News Preferred Icon

ஜெனரல் சான்டோஸ்: பிலிப்பீன்சின் தென்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இடிந்து விழுந்த பேரங்காடி ஒன்றின் இடிபாடுகளிலிருந்து மீட்புப் படையினர் புதன்கிழமை (ஜூன் 10) இறந்தவர் ஒருவரின் உடலை மீட்டனர். இதன்மூலம் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

மிண்டனாவ் கடலோரப் பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தால் பிலிப்பீன்ஸ் தென்தீவின் பல பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழந்ததுடன், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. அதோடு, அப்பகுதி முழுவதும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இதற்கிடையே, நிலநடுக்கத்தைத் தொடர்ந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து 17 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
நிலநடுக்கம்பிலிப்பீன்ஸ்மரணம்